அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்..!
மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிகை..!!
மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிகை..!!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்களு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.