மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் 42-வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 9.55 மணிக்கு எட்டியது. இதனையடுத்து, அதன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இடது கரையில் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் உதவிப் பொறியாளர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனையடுத்து, 16 கண் பாலத்தில் உள்ள ஒவ்வொரு மதகுகளும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 16 கண் பாலத்தின் பிரம்மாண்ட மதகுகள் திறக்கப்பட்ட பேரிசையுடன் புதுவெள்ளம் நுங்கும் நுரையுமாக வெளியேறியது. இதனை சேலம் கேம்ப் பகுதியிலிருந்த பாலத்தில் நின்றபடி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



முதற்கட்டமாக 25 ஆயிரம் கன அடி நீர் 16 கண் பாலம் வழியாகத் திறக்கப்பட்டது. இது படிப்படியாக ஒரு லட்சம் வரை உயர்த்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதன் பின்னர், மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. அணை நிரம்பியதால் வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை , தீயணைப்புத்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியில் காவிரிக் கரையோரப் பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்த லாவண்யா


மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் கால்வாய் பாசனத்திற்காகத் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 15 நாட்கள் முன்னதாகவே இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க | கல்லூரி வாசலில் அத்துமீறிய பாஜகவினர் - விரட்டியடித்த மாணவிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ