TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்த லாவண்யா

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள குரூப் 1 தேர்வு முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த லாவண்யா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 15, 2022, 07:15 PM IST
  • குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • 66 பேர் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி
  • செங்கல்பட்டைச் சேர்ந்த லாவண்யா முதலிடம்
TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்த லாவண்யா title=

TNPSC Group 1 Results 2022: தமிழகத்தில் காலியாக இருக்கும் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 66 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர். அதில் வெற்றி பெற்ற சுமார் 3,800 பேருக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க | TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

இதில் இருந்து 137 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு காலிப் பணியிடத்துக்கு சராசரியாக 2 பேர் வீதம் என்ற அடிப்படையில் தேர்வெழுதியவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜூலை மாதம் 13 முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது.

தேர்ச்சி பெற்ற 66 பேருக்குமான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளமான https://www.tnpsc.gov.in/ பக்கத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்பவர் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News