பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்க பேட்டியளித்த டிடிவி தினகரன் கூறுகையில்; "மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ எந்த ஒரு அக்கறையும் கிடையாது என்றும் தமிழகத்தின் அனைத்து வளங்களும் அளிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறுவார்கள் என கூறிய டிடிவி தினகரன், விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விவசாய நிலங்களில் செய்யாமல் யாரையும் பாதிக்காத வகையில் கடல் பகுதிகளில் மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 


தமிழக அரசு ஆவின் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் தான்  என்றும் தங்கள் தொண்டர்கள் யானை பலத்துடன் இருப்பதாகவும் கூறிய டிடிவி.தினகரன் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம் என தெரிவித்தார்.