ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என சசிகலா பேச்சு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு, அந்த வகையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள AIADMK தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு AIADMK இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami), AIADMK ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (Jayalalithaa Birthday) 73-வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா (Sasikala) மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 


ALSO READ | இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்! 


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்., ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொது மக்களையும் சந்திக்க உள்ளேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம்" என அவர் கூறினார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR