திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2020 விழா: உயர் நீதிமன்றம் அனுமதி
திருநள்ளாறு கோயில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி இந்து ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் நிர்வாகம், கோவிட்-19 விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில், டிசம்பர் 27 ம் தேதி சானிபெயர்ச்சி திருவிழாவின் போது பக்தர்கள் கூடுவதை தடை செய்ய கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை நிராகரித்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், திருநள்ளாறு கோயில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி இந்து ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் நிர்வாகம், கோவிட்-19 விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரம்பரை ஸ்தானிகர் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ். நாதன் என்ற அமுர்தேஸ்வரநாதன், சனிபெயர்ச்சி அன்று, பக்தர்கள் வருவதற்கும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விசாரணையின் போது, புதுச்சேரி அரசு (Pondicherry Government) தரப்பு வழக்கறிஞர் அனிதா சுமந்த், கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக விதிக்கப்பட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக உள்ள திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தர்ப்பனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தர்பரணேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள சானிபெயர்ச்சி பூஜை டிசம்பர் 27 முதல் 48 நாட்கள் நடைபெறும்.
சபரிமலை கோயிலில் (Sabarimala Temple) பின்பற்றப்பட்டதைப் போன்ற புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படும் என்று லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி வியாழக்கிழமை தெரிவித்தார்.டிசம்பர் 27 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி பூஜை ஆன்லைனில் ஒளிபரப்பப்படும் என்று கிரண்பேடி கூறினார். தனியார் செயற்கைக்கோள் சேனல்கள் பூஜாவை நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்கப்படும்.
கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும், கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரம் முன்பு கொரோனா பரிசோதனை எடுத்து ((RT-PCR அல்லது Antigen test) அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
பக்தர்கள் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் காரைக்கல் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள பிற விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கோயிலுக்குள் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க, ஒரே நேரத்தில் அதிகபட்சம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்
சனிபெயர்ச்சிக்காக சனி பகவானின் கோயிலுக்கு செல்ல கோவிட்-19 (Covid-19)தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் கட்டாயம் என்று வியாழக்கிழமை அவசர கூட்டத்திற்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. கோயிலின் நிர்வாக அதிகாரி “பதிவுசெய்த அனைவருக்கும் கட்டாய பரிசோதனை குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.
ALSO READ | லண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR