TN Budget 2018: இந்த நிதியாண்டுக்கான முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 157 நிமிடம் பட்ஜெட் உரை நிகழ்த்தியுள்ளார். காலை 10.30 மணிக்கு உரை தொடங்கிய ஓ.பி.எஸ் 1.30 மணிக்கு முடித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 157 நிமிடம் பட்ஜெட் உரை நிகழ்த்தியுள்ளார். காலை 10.30 மணிக்கு உரை தொடங்கிய ஓ.பி.எஸ் 1.30 மணிக்கு முடித்துள்ளார்.
14வது நிதிக்குழு காலத்தில் 89% உயர்வை மட்டுமே தமிழ்நாடு பெற்றுள்ளது. கர்நாடகா 155.14%, மகாராஷ்டிரா 148.93%, குஜராத் 137.70%, கேரளா 149.82% உயர்வுகளை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி ஒதுக்குவதில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் தமிழகம் சிறப்பு உதவி மானியம் வழங்கக் கோரியது. ஆனால் இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
13:20 15-03-2018
தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு(GSDP) ரூ.16,89,459 கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்.
உதய் திட்டத்தை ஏற்றதால் ரூ. 4,349 கோடியாக இருந்த நஷ்டம் ரூ.2,975 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் கடன்சுமையால் வட்டி செலவினத்திற்காக ரூ. 1,77.49 கோடி ஒதுக்கீடு.
தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ. 1,03,219 ஆக இருந்தபோதிலும் தமிழகத்தில் ரூ. 1,53,263 ஆக உள்ளது.
13:08 15-03-2018
பழங்குடியினர் நலன் சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.265 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.333.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.14,45,227 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு(GSDP) ரூ.16,89,459 கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்.
12:55 15-03-2018
ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ. 513.66 கோடியும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் மானியத்துக்கு ரூ. 87.80 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.12,301 கோடியில் சென்னை சுற்றவட்டச் சாலை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்
சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.3881.66 கோடி ஒதுக்கீடு.
பழங்குடியினர் நலன் சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.265 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.333.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கல்லூரிக் கட்டடங்களை புதுப்பிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக ரூ.7,537.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:47 15-03-2018
அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 200 கோடி செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
தூய்மை தமிழகத்திற்கான இயக்கம்17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என நம்புகிறேன்.
12:36 15-03-2018
உணவுப்பொருள் மானியம் சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.5500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டம்- ரூ. 1,747.72 கோடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு ரூ. 2,146.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.2,658.58 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.
12:30 15-03-2018
காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
16 பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்
பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டப்பணிகள் ரூ. 1,244.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.
12:23 15-03-2018விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு.
அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.250 கோடி மானியமாக வழங்கப்படும்
நெடுஞ்சாலைத்துறைக்கு 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.10,067 கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.11,073 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் என்பது 1006 கோடியாக உள்ளது.
அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்.
அத்திக்கடவு- அவிநாசி குடிநீர் வழங்கல், நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த விரைவில் அரசு அனுமதி
12:17 15-03-2018
2019 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
சமூக நலத்துறைக்கான தமிழக பட்ஜெட்டில் ரூ.5,611.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வானூர்திப் பூங்கா, பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடம் அமைக்க சிறப்புக்கவனம் செலுத்தப்படும்.
12:09 15-03-2018
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.973 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.988 கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.973 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
12:05 15-03-2018
ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்.
ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.
வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும்.
குமரி, நெல்லை, மதுரை, கோவை மருத்துவக் கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும்.
மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் உருவாக்கப்படும்.
11:57 15-03-2018
இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.
54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ. 80 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.
குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு.
பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.333.82 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்.
11:54 15-03-2018
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு
குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு
குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2 ஆவது மாநிலம் தமிழகம்.
தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்.
11:49 15-03-2018
குடிமராமத்துப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ரூ.300 கோடி.
மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ. 786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
11:42 15-03-2018
உயர் கல்வித்துறைக்கு ரூ.4,620 கோடி நிதி ஒதுக்கீடு
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்
கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்
கோவையில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்
சென்னையில் வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டம் 2055.67 கோடி ஒதுக்கீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்
11:37 15-03-2018
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது
11:25 15-03-2018
சத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ஒதுக்கீடு
100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்- நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்
11:23 15-03-2018
ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
2018-19 இல் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:19 15-03-2018
தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம், மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை
தமிழ்மொழி விரிவாக்க மையம் தஞ்சை தமிழ் பல்கலையில் உருவாக்கப்படும்
தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்
31.3. 2019 அன்று தமிழகத்தின் மொத்த கடன் 355845 கோடி கடனாக இருக்கும்
11:08 15-03-2018
நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18 இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.
மானியம், உதவித்தொகை ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி என தமிழக பட்ஜெட் அறிவிப்பு!
மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ. 20,627 கோடியாக இருக்கும்
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு
மானியம், உதவித்தொகை ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி என தமிழக பட்ஜெட் அறிவிப்பு!
10;45 15-03-2018
கடந்த ஆண்டு ரூ.14,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைவு.
2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு!
10:20 15-03-2018
மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிப்பு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
2018- 19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இன்று வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க அரசு முயற்சி எடுக்கவில்லை ஸ்டாலின் கேள்வி.
10:08 15-03-2018
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி; செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிப்பு !
2018- 19 ஆம் நிதியாண்டின் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது!
பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
09:56 15-03-2018
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
09:40 15-03-2018
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து, பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவதுஎன்பது குறித்தும், பேரவைக்கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டில் நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கிடையில், இன்று மாலைஅ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிஉறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது எப்படி போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதேபோல் தி.மு.க எம்.எல்.ஏக்-கள் கூட்டம் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அவையில் முன்வைக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கடும் என தெரிகிறது.
எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் தொழில் முனைவோர்கள்..........!