கமலா ஹாரிஸ் வெற்றியை நெருங்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் இந்த இரட்டை கிராமங்கள் தீபாவளிக்கு இப்போதே கொண்டாட தயாராகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் மற்றும் பைங்கநாடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் உறசாகத்தில் மிதக்கின்றனர். 


அமெரிக்காவில் (America) ,  ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர்  வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டின் இரண்டு கிராமங்களின் மக்களும் உற்சாகமாக உள்ளனர். அவரது உறவினர்களும் ஆவலுடன் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் உள்ளனர்.


வளமான காவிரி டெல்டா பிராந்தியத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்தில்,  துளசேந்திரபுரம் மற்றும் பைங்கநாடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் உறசாகத்தில் மிதக்கின்றனர். ஜோ பிடனும் (Joe Biden), கமலா ஹாரிஸும் (kamala Harris)  வென்றார் என்ற முறையான அறிவிப்புக்காக  மக்கள் காத்திருக்கிறார்கள்.


அமெரிக்க செனட் உறுப்பினரான கமலா ஹாரிஸின் வெற்றியை கொண்டாட கிராமவாசிகள் இப்போது பட்டாசுகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.


பெண்கள் கிராம கோவிலுக்கு முன்னால் மிகப்பெரிய கோலங்களை வரையவும் திட்டமிட்டுள்ளனர்.


கமலா ஹாரிஸின் தாத்தா பாட்டிகளின் சொந்த ஊராக தங்கள் கிராமங்கள் திகழ்கின்றன என்று மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.


அருகிலுள்ள மன்னார்குடியிலிருந்து துளசேந்திராபுரம் மற்றும் பைங்கநாடு கிராமங்களுக்குச் செல்லும் சாலை முழுவதும், ஜோ பிடன் (Joe Biden) மற்றும் கமலா ஹாரிஸ் உள்ள சுவர் சுவரொட்டிகள் மற்றும் டிஜிட்டல் பதாகைகளால் நிரப்பப்பட்டுள்ளது.


ALSO READ | மர்மமான வடகொரிய அதிபரை போல், மர்மம் நிறைந்த வட கொரியா ஹோட்டல்..!!!


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது தமிழகத்தின் இந்த கிராமத்தில் தேநீர் கடைகள் போன்ற பொது இடங்களில் விவாதிக்கப்படுகின்றன


அமெரிக்கத் தேர்தல்கள் (US Presidential Election) முடிவுகளை ஆர்வமுடன் தொலைகாட்சியில் காண்கிறார்கள்


முன்னதாக, நவம்பர் 2 ஆம் தேதி, அமெரிக்கா தேர்தல் நடப்பதற்கு முன், ​​மக்கள் உள்ளூர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.


துளசேந்திரபுரம் மற்றும் பைங்கநாடு ஆகியவை விவசாய கிராமங்கள் மற்றும் இங்கிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள மன்னார்குடிக்கு அருகில் ஒருவருக்கொருவர் மிக அருகில் அமைந்துள்ளன.


கமலாவின் தாத்தா பி வி கோபாலன், இளைஞராக இருக்கும் போதே, துளசெந்திராபுரம் கிராமத்திலிருந்து  சென்று பிரிட்டிஷ் அரசு சேவையில் இணைந்தார்.


அவரது பாட்டி ராஜம் அருகிலுள்ள பைங்கநாடு கிராமத்தைச் சேர்ந்தவர்.


கமலாவின் மூதாதையர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டு வெளியேறிய போதிலும், குடும்ப உறுப்பினர்கள் துளசெந்திரபுரத்தில் உள்ள கோயிலுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.


கோபாலன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு காலகட்டங்களில் கோயில் புனரமைப்பிற்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.


ALSO READ | FATF கருப்பு பட்டியலை எண்ணி பாகிஸ்தான் அஞ்சும் காரணம் என்ன..!!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR