வாகன ஓட்டிகளிடம் நடுரோட்டில் கதறிய காவலர்கள்
Helmet Awareness: உங்கள் வரிப்பணத்தில் நாங்கள் சம்பளம் வாங்குகிறோம். உங்கள் உயிரை பாதுகாக்கவில்லை என்றால் எதற்காக நாங்கள் போலீசாக இருக்க வேண்டும்.
Helmet Awareness: உங்கள் வரிப்பணத்தில் நாங்கள் சம்பளம் வாங்குகிறோம். உங்கள் உயிரை பாதுகாக்கவில்லை என்றால், எதற்காக நாங்கள் போலீசாக இருக்க வேண்டும் என கெஞ்சிய காவல் அதிகாரி. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 1 தேதி முதல் சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது ஹெல்மெட் அணியாமல் வந்த பயணிகளிடம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நடுரோட்டில் வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய காவலர்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சேலம் குகை பிரதான சாலையில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தனர். அவர்கள் அனைவரையும் நிறுத்தி காவலர்கள் அறிவுரை வழங்கினர். அப்பொழுது பேசிய காவல் உதவி ஆய்வாளர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதால் அன்றாடம் எவ்வளவு விபத்து நடைபெறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? மருத்துவமனையில் வந்து பாருங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் கதறல் சத்தத்தை உங்களுக்கு அப்போதுதான் தெரியும் என்றார்.
மேலும் படிக்க: உண்மை காதலை நிரூபிக்க இளைஞன் செய்த வேலை!
பொதுமக்களிடம் தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் கட்டும் வரி பணத்தில் தான் நாங்கள் சம்பளம் வாங்குகிறோம் உங்கள் உயிரை காப்பாற்றவில்லை என்றால் எதற்காக இந்த போலீஸ் என்று கதறினார். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது குழந்தைகள் மற்றும் பெண்கள் வாகனம் ஓட்டுபவரை கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று கூறும் படியும் அறிவுறுத்தினார்.
காவலரின் இந்த ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கதறலை அனைத்து வாகன ஓட்டிகளும் ஏற்று இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து காவலர்கள் வாகன ஓட்டிகள் அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: புதிதாக 44 படிப்புகள் அறிமுகம் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ