மாநில சுயாட்சி தொடர்பாக ராசமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்கு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றுள்ளனர். பெயருடன் கூடிய அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மு.க.ஸ்டாலினின் தனிச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அரசியல் சட்ட அடிப்படை பண்புகளை சிதைத்திட திமுக ஒப்புக் கொள்ளாது என்றார். இட ஒதுக்கீட்டு கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசு  சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும் என்றார். மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டவருக்கு 27% இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர திமுக ஸ்டாலின்  சிறப்பு தீர்மானம். 


அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை திருத்த முயற்சித்தால் அதை திமுக அனுமதிக்காது. இந்தியா முழுவதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் மோடி அரசின் திட்டத்தை கைவிட வேண்டும்  என்றும் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகளை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றார். இந்திய அரசியல் சட்டம் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வாழ்த்துகள். அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க திமுக ஒப்புக்கொள்ளாது. 


கூட்டாட்சி அமைப்பு முறையைதான் திமுக வலியுறுத்தி வருகிறது. 1974 இல் பேரவையில் பேசிய கருணாநிதி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியை முன்வைத்தனர். மாநில சுயாட்சி தொடர்பாக ராசமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது என்று அவர் பேசினார்.