தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் சமூக அமைப்புகள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில கட்சிகள் என பல தரப்பினரும்  தீவிரமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், மணப்பாறை உள்ள பர்னிச்சர் மற்றும் மெட்டல் விற்பனை நிலையத்தினர் இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


அதாவது 1 அடி முதல் 2 அடி வரையிலான 250 சீமைக் கருவேல செடிகளை வேருடன் கொண்டுவந்து கொடுத்தால் ரூ.1,150 மதிப்பிலான ‘ஈஸி சேர்” இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வரை இந்தத் திட்டம் இருக்கும். சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்புப் பணியில் தனி நபர் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளேன் என பர்னிச்சர் விற்பனை நிலைய உரிமையாளர் எம்.விஜயராஜ் கூறியுள்ளார்.