திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக அந்த அமைப்பினர் கூறியிருப்பதாகவும், இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: " பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடந்த பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அமைச்சரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. 



திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்" அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.