விளையாட்டு விபரீதமானது - தாயை பயமுறுத்த பிளேடை கழுத்தில் வைத்த மகன் பலி
தாயை பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர் தாயின் கண்முன்னே பலியான சோகம்.
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சரவண விஷால் (23). கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தாயை பயமுறுத்த நினைத்த சரவண விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துவிடுவதாகக் கூறி அவரது தாயிடம் வாதம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், குளியலறைக்கு சென்ற சரவண விஷால் அங்கு பிளேடால் தன்னைதானே கழுத்தில் அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில். ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சரவண விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்!
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் போலீசார் இறந்துகிடந்த சரவண விஷாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்இறந்த சரவண விஷால் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தற்போது வீடு திரும்பிய சில நாட்களிலேயே வீட்டில் இருந்தபோது தனது தாயை பயமுறுத்துவதாக எண்ணியபோது நிஜமாக பிளேடால் அறுத்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | உங்களைத் தேடுங்கள்... அன்னப்பூரணி அரசு அம்மாவின் அடடே அட்வைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR