12:05 27-06-2018
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விமலாவுக்கு பதில் எம். சத்யநாராயணா விசாரிக்க உச்ச நீத்திமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க கோரிய டிடிவி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12:01 27-06-2018
3-ஆவது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் திரும்பப்பெற வேண்டும் என்றும் எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியாக இருக்காது எனவும், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



11:55 27-06-2018
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை!



11:48 27-06-2018


டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருணமிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. 



தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் (ஜூன் 27) விசாரிக்கவுள்ளது! 


18 அதிமுக எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 


இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தனர். பின்னர், கடந்த ஜூன் 14 ஆம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து,  ஜூன் 14 ஆம் தேதி விசாரணை செய்ததில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். நிதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்தது. 


இவ்வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.


இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் கடந்த ஜூன்-25ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஐகோர்ட் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் 17 பேரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக  இன்று(ஜூன்-27) விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து உள்ளது.