தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதா நியமித்தது தமிழக அரசு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. பல்வேறு குழுக்களாக பலர் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கு சேகர் என்கிற சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை உதவி ஐ.ஜி.பி.வி.கீதா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளர்.


2 மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறி ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை அல்லது ஒரு வருடத்திற்கு கீதா சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


2015-18 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் தற்போது வரை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.