ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகம் நடத்தியுள்ளார் முதல்வர் என மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.... #Hydrocarbon என்ற ஆஸ்டா‌க்கை பயன்படுத்தி " ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகம் ஆடியுள்ளார் முதல்வர். 'நீட்'டுக்கு எதிரான 2 சட்டப்பேரவைத் தீர்மானங்களையே பொருட்படுத்தாத பிரதமர், இவரது கடிதத்திற்கா செவிசாய்க்கப் போகிறார்?


இது குறித்து அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றத் தைரியம் உண்டா?..". மேலும், 'நீட்' விலக்கு கோரி 2 முறை அனுப்பிய தீர்மானங்களையே பொருட்படுத்தாத பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய கடிதத்துக்கு செவி சாய்ப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் விவசாயிகள் தற்கொலையை விட வேலையில்லா பட்டதாரிகள் அதிகம் தற்கொலை செய்வதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரம் கூறுவதை சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், அரசுக்கு விருது கிடைத்து விட்டதாக கூறுவதா எனவும் வினவியுள்ளார்.



தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டியது அவசியமில்லை என்ற மத்திய அரசின் உத்தரவை, திரும்ப வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.


சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழ்நாடு அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியிலேயே அமைவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.