கவர்னர் உரை என்பது அம்மா கால அட்டவணை : ஸ்டாலின்
தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை தொடர்பாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அம்மா திட்டங்களின் பட்டியல் மட்டுமே கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது. கவர்னர் உரை என்பது தமிழக அரசின் உரையாகவே உள்ளது. சுருக்கமாக சொன்னால் அம்மா கால அட்டவணை (அம்மா காலண்டர்) தான் கவர்னர் உரை.
நோக்கியா போன்ற தொழில் நிறுவனங்களை திரும்பக் கொண்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு சென்றதற்கு காரணமே இந்த அரசு தான். மேலும் மதுரவாயல் பறக்கும் சாலை ரத்து ஆனதற்கும் இவர்கள் தான் காரணம்.ஆனால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து திட்டங் களை நிறைவேற்றப் போவதாக ஆளுனர் உரையில் கூறி இருப்பது விந்தையான ஒன்று.
இந்த ஆளுனர் உரையில் எந்த வித கொள்கை அறிவிப்பும் இல்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் திட்டங்கள் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.