இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் கடந்த ஆண்டு ட்விட்டரில் 'மீ டு' புகார் தெரிவித்திருந்தனர். பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரத்தில், உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாக இயக்குநர் சுசி கணேசன் குற்றம் சாட்டியிருந்தார்.அது மட்டுமின்றி, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும்,தி நியூஸ் மினிட் இணையதள செய்தி நிறுவனமும் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இயக்குநர் சுசி கணேசன், அதில் தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பொய்யான தகவலை பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனவும், இதற்கு இழப்பீடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி,சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


மேலும் படிக்க | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!


இந்நிலையில், இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள ட்விட்டர் நிறுவனம், தங்களை இந்த வழக்கில் இருந்து நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ட்விட்டர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் என்பது ஒரு சமூக ஊடக வலைதளம் என்பதால், சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்க வேண்டும் என வாதிட்டார்.ஆனால் டிவிட்டர் நிறுவன தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியோர் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 


மேலும் படிக்க | கன்னித்தன்மை பரிசோதனை இனி இல்லை Pakistan உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR