போலீஸ் தாக்கியதால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக புகார்
வேலூர் காட்பாடி அருகேயுள்ள பிரம்மபுரம் காலனியில் இளைஞர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உதவி ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்த போன இளைஞர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்தாறா ?
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் காலனியைச் சேர்ந்தவர் விஜய். பெயிண்டராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காட்பாடி பிரம்மபுரம் காலனி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவின் போது இரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார். அப்பொழுது சம்பவ இடத்திலிருந்த பெண் ஒருவர், விஜய் மீது புகார் சொன்னதால், கூட்டத்தில் வைத்து விஜயை காவலர் கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பிரம்மபுரம் பகுதியில் இரயில் முன் பாய்ந்து விஜய் தற்கொலை செய்துகொண்டார்.
விஜய்யின் தற்கொலையால் உடைந்த போன அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் உதவி ஆய்வாளர் கார்த்திக் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். காவலர் தாக்கியதில் அவமானம் அடைந்த விஜய், இரவு முழுக்க கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து, காவலர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரம்மபுரம் காலனியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் சாலை மறியலால் காட்பாடி திருவலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் காட்பாடி டிஎஸ்பி பழனி பேச்சுவார்த்தை நடத்தினார். ஊர் பொது மக்கள் புகார் அளித்தால் உரிய விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து தற்காலிகமாக மறியல் போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர். அதன் பிறகு விஜய்யின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணையும் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | காதல் மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியில் உதவி ஆய்வாளர் தாக்கியதாக இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் வடு ஆறுவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது காட்பாடி மட்டுமல்ல வேலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் முடிவில்தான் இளைஞர் விஜய்யின் தற்கொலையில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சகோதரியை துண்டுத்துண்டாக வெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR