திரையரங்கில் தம்பதியை தாக்கிய ஊழியர்கள் - பொதுமக்கள் ஆவேசம்
சிதம்பரத்தில் வெளியில் இருந்து திண்பண்டம் எடுத்துச் சென்றதற்காக திரையரங்க ஊழியர்கள் தம்பதியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில், ராதாநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குடும்பத்துடன் சிதம்பரத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது, அவர்களை தடுத்த திரையரங்க ஊழியர்கள், தியேட்டருக்குள் தின்பண்டங்கள் எடுத்து செல்லக் கூடாது என கூறியுள்ளனர். ஆனால் அந்த தம்பதி 2 வயது மகளுக்கு தேவையான பால் மற்றும் பிஸ்கட்டை எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - நாமக்கல்லில் பயங்கரம்
இதனைப் பார்த்த ஊழியர்கள் பெண்ணின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என கூறி, பையில் இருந்த பொருட்களை வாங்கி அப்புறப்படுத்தியுள்ளனர். இது அந்தப் பெண்ணுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே, இன்னும் பையில் ஏதேனும் இருக்கிறதா? என கோபத்துடன் அந்தப் பெண்ணிடம் ஊழியர்கள் கேட்டபோது, தன்னுடைய கைப்பையை தூக்கி வீசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த திரையரங்க ஊழியர்கள் பெண்ணை தகாத வார்த்தையில் பேசி திட்டியுள்ளனர். அருகில் இருந்த அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர், ஆத்திரம் தாங்காமல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று திரண்டு, அந்த தம்பதியை கைக்குழந்தையுடன் தாக்கியுள்ளனர்
அவர்களின் சரமாரி தாக்குதலில் தம்பதியினர் குடும்பத்தினர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த பெண்ணின் சகோதரர், மேல் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தகவலின் பேரில் சிதம்பரம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த திரையரங்கில் இதேபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி பொதுமக்கள், காவல்துறை மற்றும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR