ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுபோல சாலை விபத்துகள் ஏற்பட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் சாலை விபத்துகளும் அதில் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் உள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது, உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு ஏற்கனவே நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
அதேபோல சென்னையில் விபத்துகளைக் குறைக்கவும் கூட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்களும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 134 பயணிகளும் உயிரிழந்தனர். அதேபோல 2929 வாகன ஓட்டிகளும் பின்னிருக்கையில் அமர்ந்த 365 பயணிகளும் காயமடைந்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 5 மாதங்களில் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் போடாமல் பின் இருக்கையில் அமர்ந்த 18 பேரும் பலியாகி உள்ளனர்.
அதேபோல் கடந்த 5 மாதங்களில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 127 பேர் என மொத்தம் 841 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகச் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளின் அடிப்படையில் விபத்துகளைக் குறைக்கச் சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
இந்த நிலையில் தற்போது இத்தகைய விபத்துகளை தவிர்க்க இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின்னர் அமர்ந்து செல்பவர்கள் என இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இந்த இரு புதிய விதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வடகலை, தென்கலை சச்சரவு...அனைத்து உத்தரவுகளையும் நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR