தேனி : தகாத உறவை கண்டித்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்
தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கணவரே அரிவாள்மனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை அதிரவைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ....
தேனி மாவட்டம் அரசு மருத்துவமனை வளாகம்.... விடிந்ததும் கண்ணீரோடும் மரண பீதியோடும் ஜனக்கூட்டம் குவிந்து கிடந்தது. எல்லோரும் கண்டமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எதோ பெரிய அசம்பாவிதம் அரங்கேறியிருப்பதை அங்கிருப்பவர்களின் பார்வை பிரதிபலித்தது.
கண்டமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி கிழக்குத்தெரு சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி 50 வயதான ராஜாத்தி. இவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி மீதான காதலை குறைத்து கொண்ட லட்சுமணன் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகியிருக்கிறார். நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. அடிக்கடி ரகசிய காதலியை பார்க்க சென்ற லட்சுமணன் அவருடனே நேரத்தைக் கடத்த தொடங்கினார். இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக மாறிவிட்டது. அதில், தகாத உறவை கைவிட சொல்லி பலமுறை ராஜாத்தி லட்சுமணனை கண்டித்தும் அவர் கேட்காமல் தான் நினைத்த போக்கிலேயே சென்றிருக்கிறார். இதனால் மனமுடைந்த போன ராஜாத்தி, இது சம்பந்தமாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான், ராஜாத்தி அவரது வீட்டிலேயே உடலில் வெட்டுக்காயங்களுடன் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், இறந்துபோன ராஜாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் கிடைத்த தடையங்களைச் சேகரித்துக் கொண்ட பின்னர் விசாரணையை தொடங்கினர். அதில் ஒரே சந்தேகம் ராஜாத்தியின் கணவர் லட்சுமணன் மீது விழுந்தது. நினைத்தபடியே அது உறுதியானது. ஆளை தேடிபிடிக்க முற்பட்ட போது தலைமறைவாகினார்.
மேலும் படிக்க | தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
இதற்கிடையே, தனது தந்தையே தனது தாயை கொலை செய்ததாக ராஜாத்தியின் மகன் ராமகிருஷ்ணன் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தனிப்படை அமைக்கப்பட்டு லட்சுமணனைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கண்டமனூர் காவல் நிலையத்தில் லட்சுமணன் சரணடைந்தார். ஆத்திரத்தில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் லட்சுமணனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை கணவனே அரிவாள்மணையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தஞ்சை : பெண்ணிடம் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR