தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, 
சென்னையில் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், என் மீது காவி சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக கூறியிருந்தார். 


இந்நிலையில், மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் எப்போது வெளிப்படையாகத்தான் பேசி வருகிறேன் என்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாகவும் கூறினார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி விட்டன. நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன் என்றார். இந்திய பொருளாதாரம் மந்தமாகதான் உள்ளது; அதை மீட்க  என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும். நான் பாஜகவில் சேரப்போவதாக வரும் தகவல் பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.


தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்தார். அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாகவும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.