சென்னையில் விற்பனையாகும் மூன்களில் எந்த வேதிப்பொருட்களும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவிக்கையில்.. சென்னையில் விற்கப்படும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் கலக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மீன்பிடித்துறைமுகம், விற்பனையகம் உள்ளிட்ட இடங்களில் மீன்களின் மாதிரிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவத்துள்ளார்.


மேலும் தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்பட்டு வருவதால் மீன்களில் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிமாநிலத்திலிருந்து வரும் மீன்களில் ஃபார்மலின் கலந்திருந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.