புதுக்கோட்டையில் தனியார் கேரளா ஆயுர்வேதிக் சிகிச்சை மருத்துவமனையை புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"திரவுபதி முர்மு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது. கவர்னரின் அதிகாரத்தை அனைவரும் மதிக்க வேண்டும்" என்றார்.


பின்னர், "தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியை ஊக்கப்படுத்துவதற்காக தான் பிரதமர் கொண்டு வந்துள்ளார். புதிய கல்விக் கொள்கையால் இன்னொரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் நான் கூறினேன். ஆனால் இந்தியை பற்றி கூறுகிறேன் என்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் தமிழகத்தில் ஏன் இவர் வாலை நீட்டுகிறார் என்று கேட்கிறார்கள்.


மேலும் படிக்க | உணவுகள் மீதான வரிகளுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


எனது உயிர் தமிழகத்தில் தான் போகும், நான் ஒரு தமிழச்சி வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாக தான் சென்றுள்ளேன். தமிழகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அதை பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் உள்ளது. என்னை எதிர்த்துப் பேசுபவர்கள் முழுமையாக தமிழில் பேச முடியுமா." என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "கம்பர் ராமனை பற்றி பேசியதாலேயே கம்பராமாயணம் மட்டுமல்ல கம்பரும் மறைக்கப்படுகிறார், மறுக்கப்படுகிறார். நாம் கம்பரையும் போற்ற வேண்டும், திருவள்ளுவரையும் போற்ற வேண்டும். கம்பராமாயணத்தையும் போற்ற வேண்டும்."


"புதுச்சேரியில் துணைநிலை கவர்னரும் முதல்வரும் இணைந்து பணியாற்றி வருவது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனக்கும் முதல்வருக்கும் எந்த விதமான ஈகோ பிரச்சனையும் கிடையாது. அரசியல் அமைப்பில் கவர்னருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ஆக்க கூடாது என்பது தான் எனது கருத்து. பட்டமளிப்பு விழாவையே அரசியல் ஆக்குகிறார்கள், மாணவர்களுக்கு நல்லதை விதையுங்கள்." இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க | மாஞ்சோலை படுகொலை... அஞ்சலி கூட்டத்துக்கு அனுமதி மறுத்த அரசு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ