மாஞ்சோலை படுகொலை... அஞ்சலி கூட்டத்துக்கு அனுமதி மறுத்த அரசு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மாஞ்சோலை படுகொலை நினைவு நாளையொட்டி நேற்று நடக்கவிருந்த அஞ்சலி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லையென கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 24, 2022, 02:43 PM IST
  • மாஞ்சோலை படுகொலை கடந்த 1999ஆம் ஆண்டு நடந்தது
  • அப்போது திமுக ஆட்சியில் இருந்தது
  • கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்
 மாஞ்சோலை படுகொலை... அஞ்சலி கூட்டத்துக்கு அனுமதி மறுத்த அரசு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு title=

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்தது எங்கள் கட்சி தான். எங்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23ஆம் தேதி காலையில் ஆற்றில் அஞ்சலி செலுத்திவிட்டு மாலையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர். அதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்ட போது, அனுமதி கேட்ட இடம் ஜாதி ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதி எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என கூறிவிட்டனர்.

Manjolai

ஜாதி மோதல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவது தான் காவல்துறையின் பணி. ஆனால் போலீசார் திட்டமிட்டே எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. இதற்கு போலீசார் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியில் சந்திப்போம். 

மேலும் படிக்க | தம்பி செந்தில் பாலாஜி பாஜக டார்ச்சர் செஞ்சா சொல்லு நான் பார்த்துக்குறேன் - களத்தில் சீமான்

திராவிடம், திராவிடம் என்று பேசியே மக்களை ஜாதி ரீதியாக, மதம் ரீதியாக பிரித்து விட்டார்கள். 50 வருடமாக மாறி, மாறி ஆட்சி செய்த கட்சிகள் மத மோதல்களை தடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு மீது நம்பிக்கையை இழந்த பிறகு தான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

எனவே இதற்கு திமுக அரசுதான் பொறுப்பு. தி.மு.க. 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 5 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க | மாணவி உயிரிழப்பு - முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News