கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது. இதற்கு புதுச்சேரியும் விதிவிலக்கல்ல. புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 497, காரைக்காலில் 80, மாஹேவில் 51,  ஏனாமில் 35  என மொத்தம் 663 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் துணை நிலை ஆளுநர் உத்தரவின் கீழ், சுகாதரத்துறை சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றது.   புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, இன்று, கொரோனா பரிசோதனை  முகாம்களையும், தடுப்பூசி முகாம்களையும் நேரில்சென்று ஆய்வு செய்தார்.


அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த, டாக்டர். தமிழிசை, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், கொரோனா சிக்கிசைக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துகள் உட்பட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுபாடு ஏதும் இல்லை எனவும், போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.


ALSO READ | கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை 


மத்திய அரசு சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) COVID-19 சிகிச்சை மருந்தான ரெம்டெசிவரின் விலையை ஒரு ஊசிக்கு ரூ.2,000 வரை குறைத்தது குறிடத்தக்கது. இந்தியாவில் ரெம்டெசிவா்  (Remdesivir ) மருந்தை உற்பத்தி செய்ய, 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது. 18.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


ALSO READ |  கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR