"மகப்பேறு விடுப்பு வழங்குவதில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் (High court) உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 180 ல் இருந்து 2016 ஆம் ஆண்டு 270 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.


இந்த சலுகை அலுவலகத்தில் பணிபுரியக் கூடிய தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இதனை அமல்படுத்தவில்லை என்று ராஜகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.


அதில் "அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடிய தற்காலிகப் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் எனவே ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.


ALSO READ | சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன


இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி , என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் அரசு அலுவலகங்களில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் எந்தவொரு பாராபட்சமும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு (TN Government) உத்தரவிட்டனர்.!!


ALSO READ | சிறு, குறு நடுத்தர தொழில் தொடங்குபவர்கள் இனி ஃபேஸ்புக் மூலம் கடன் பெறலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR