டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால், அதிமுகவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முத்து ராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:- திமுக-வினர் மீதான ஊழல் வழக்குகளை மறைப்பதற்காக, தங்கள் மீது வழக்கு தொடருவோம் என கூறுவதாக முதலமைச்சர் கூறினார். ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே, தங்களை பயமுறுத்தி, ஆளும் அதிமுக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 


காவிரி பாசனம் பெறும் மாநிலங்களுக்கு இடையே ஒத்த கருத்து இருந்தால் மட்டுமே, புதிய அணை கட்ட முடியும் என்றார். மேலும், பட்டாசு வழக்கில், தமிழ்நாடு அரசின் மனுவின்படியே உச்சநீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியிருப்பதாகவும், பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்யும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.