மாத்தி யோசிங்க வருமானத்துக்கு பஞ்சமில்ல: உழைக்கும் கரங்கள்
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆட்டோவில் பிரத்தியேக வசதி செய்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர் பாராட்டுகள் குவிகிறது
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆட்டோவில் பிரத்தியேக வசதி செய்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர் பாராட்டுகள் குவிகிறது
ஜங்ஷன் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவருக்கு வயது 74. 10 ஆண்டுகளுக்கு முன்பு டைலர் ஆக தொழில் செய்துவந்த இவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிகிறார்.
ஆட்டோ ஓட்டுனரான மகனின் ஆட்டோவில் ஓட்டிப் பார்த்து ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்ட இந்த முதியவருக்கு தொழிலில் முடக்கம் ஏற்பட்டது. ஆயத்த ஆடைகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இவரது தொழிலில் வருமானம் மிகவும் குறைந்தது.
மேலும் படிக்க | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்
எனவே, வருமானத்திற்கான மாற்று வழியாக ஆட்டோவை தேர்ந்தெடுத்த சுப்பிரமணி, தனக்கென ஒரு ஆட்டோவை வாங்கி அதில் பயணிகளுக்கு ஏற்ற வகையில் பிரத்தியேக ஏற்பாடுகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க ஆட்டோவின் மேற்பகுதியில் நெல் மற்றும் சோளத்தட்டுகளால் கூரை அமைத்து அதனை ஈரப்படுத்தி வடிவமைத்திருக்கிறார்.
ஆட்டோவில் செல்பவர்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் ஆட்டோவில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இவரின் ஆட்டோவில் செல்ல விரும்புகின்றனர். எனவே சுப்பிரமணியின் ஆட்டோவிற்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.
மேலும் காலை நேரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் இவர் பள்ளி குழந்தைகளுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க ஆட்டோவிற்கு கலர் கலராக லைட் அமைத்து குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க செய்துள்ளார்.
அவசரத் தேவைகளுக்காக ஆட்டோவில் வருபவர்களுக்கு தாகம் தணிக்க அவர் தண்ணீரையும் உடன் வைத்துள்ளார் தொழிலில் நேர்மையும் அதில் ஆர்வமும் செலுத்தி தனது ஆட்டோவை புதிதாக மாற்றியுள்ளார்.
தினந்தோறும் பிற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விட தனக்கு கூடுதலாக கிடைப்பதாகவும் இதனால் மனதுக்கு நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல அதனை நேர்த்தியாக செய்து பலரின் பாராட்டைப் பெறும் இந்த எழுபது வயது ’மாத்தி யோசி. இளைஞரின் முயற்சியை அனைவரும் பாராட்டுகின்றனர்.
மேலும் படிக்க | காதல் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR