Thirumavalavan News Tamil | மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் எல் முருகன் பேசும்போது, "சமூகநீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை. அவர் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டிருக்கும் அவர் எப்படி தலித் தலைவராக முடியும். அவர் ஒரு சிறிய கட்சியின் தலைவர். அவர் எப்படி ஒட்டுமொத்த தலித்களுக்கும் தலைவராக முடியும். தலித்களின் தலைவர் என்றால் அனைத்து தலித்களையும் சமமாக பார்க்க வேண்டும். திருமாவளவன் எல்லாம் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை" என சரமாரியாக விமர்சித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு திருமாவளவன் இப்போது காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். எம் முருகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அளித்திருக்கும் பேட்டியில், " எல்.முருகன் ஒரு சங்கி. அவர் அருந்ததியர் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியவந்தது. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அருந்ததியர் என காட்டி கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களுடன் பங்கேற்றதில்லை. அருந்ததியர்களுக்காக எந்த இடத்திலும் போராடியதில்லை. குரல் கொடுத்ததில்லை. அவர் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். தான் முருகனை அருந்ததியர் என அடையாளம் காட்டியது. அருந்ததியர் இடஒதுக்கீட்டான எந்த போரட்டத்திலும் எல் முருகன் பங்கேற்றதில்லை. குரல் கொடுத்து வாதாடியதில்லை. போராடிய இயக்கங்களுடன் நின்றதில்லை. 


மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


தமிழ்நாட்டில் உள்ள அருந்த்தியர்களும் எல்.முருகனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்க காலத்தில் இருந்து அருந்ததியர் சமுதாய இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. அருந்ததியர் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களிலும் மாநாட்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்று உள்ளது. அருந்தியர் இடஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதியிடம் பேசிய கட்சியே விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். இந்த கட்சியால் தான் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடே கிடைத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அருந்ததியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று பொறாமை கொண்ட சில உதிரிகள் கட்சியில் உள்ளவர்கள் வெளியேற்ற தொடர்ந்து அவதூறுகளை பரப்புக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு எதிர்த்து அல்ல. அவதூறு பரப்புவது அநாரீகமான அரசியல். 


உள் ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிகிறவர்களை பற்றி அவர்கள் விமர்சிப்பது இல்லை. அருந்ததியர்களை ஆதரித்த ஒரே தலித் அமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. சொல்லி தருகின்றபடி விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்புகின்றனர். அம்பேத்கார் கண்ட கனவுக்கு எதிராக இருக்கிறதால் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தலீத்களை விருப்பம்போல் கூறு போடுவது போல் இருக்கிறது. அரியானாவில் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசு செய்கிற முதல் வேலையே சப்- கேட்கரிஷன் தான். இதை செய்தால் எந்த காலத்திலும் தலீத்கள் ஒன்று சேர முடியாது. சட்டம் வகுக்கும் போதே தலித்தகள், பழங்குடியினர் தொடர்பாக நிலைபாடு கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை, மானிலங்களவை ஆகியவற்றில் விவாதித்து நிறைவேற்றிய பின்னர் தான் குடியரசு தலைவர் ஒப்பதல் அளிக்க வேண்டும் என்று அம்பேத்கார் கொண்டு வந்து உள்ளார். 


இந்தியா முழுவதும் தலீத்கள், அதிவாசிகள் ஒன்றுப்பட்டு இருந்தால் மட்டும் தான் எதிர்காலத்தில் தற்காத்து கொள்ள முடியும். இதை அடித்து நொறுக்கி தகர்க்கிற பணியை தான் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் ஈடுப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சப்- கோட்டாவை ஆதரித்தோம். ஆனால் சப்- கேட்கரிஷன் என்ற பெயரில் தனி கோட்டாவை வழிவகுப்பதை எதிர்க்கிறோம். பொருளாதார அளவு கோல்லை எதிர்க்கிறோம். விசிக தாக்கல் செய்த மனு என்பது ரிவ்யூ பெட்டிசன். தீர்ப்பை தந்த நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய சொல்கிறோம். தீர்ப்பை மாற்றி எழுத வாய்ப்பு இல்லை. ஆனால் சந்தேகங்கள் களைய வேண்டும். எதிர்ப்பை பதிவு செய்ய வழக்கை தொடர்ந்தோம். அருந்ததியர்களுக்கு எதிரானது இல்லை. எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ். சங்கி. அதனால் இப்படி பேசுகிறார்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.


மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ