திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் பாஜக அரசை கண்டித்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம் பி திருநாவுக்கரசர், பாஜக அரசு இந்தியாவில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், பொய்யான பிரச்சாரத்தை பாஜக அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் மட்டும் பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வருகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்" என தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், " காங்கிரஸ் -  திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதியைவிட பாஜக அரசு 3  மடங்கு அதிகமாக நிதி வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி கூறூகிறார். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து கிடைப்பில் போடப்பட்டுள்ளது." என கூறினார். 


மேலும் படிக்க | இஷ்டத்துக்கு செய்தி வெளியிட வேண்டாம்.. ஊடகங்கள் அறத்துடன் நடந்துக்கொள்க -செல்வபெருந்தகை


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக அல்லது மதிமுகவிற்கு அதிகம் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு? பதில் அளித்த திருநாவுக்கரசர், "உங்களுக்கு யார் சொன்னது பொய்யான தகவலை பரப்பாதீர்கள். தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் எம்பி ஆக நான் உள்ளேன். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். ஆகவே நான் மீண்டும் திருச்சி தொகுதியை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்" என்றார். 


திருச்சி மாநகரில் எங்கள் தொகுதி எம்பி காணவில்லை கண்டால் வர சொல்லவும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு அவர் கோபமடைந்தார். நிருபர்களிடன் ஒருமையில் வாக்குவாதம் செய்த அவர், "நீ எத்தனை முறை என்னை பார்த்தாய்?, நீ எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர், பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்கிறாய்" என்று ஆக்ரோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


திருநாவுக்கரசர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் பரப்படுகிறதே? என்ற கேள்விக்கு ஆவேசமானார். " அப்படி சொன்னது எவனாக இருந்தாலும் செருப்பால அடிப்பேன். இதுபோன்று தகவல்களை பரப்பும் அவர்களிடம் சீமானை போன்று தான் பேச வேண்டும். இனி நானும் சீமானை போன்று பேசப் போகிறேன். இந்தக் கேள்வியை சென்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேளுங்கள்" என்று ஆவேசமாக பேசி பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டார்.


மேலும் படிக்க | மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரார்த்தனை: பிரதமர் மோடி மகிழ்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ