Tamil Nadu Latest News: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், "டெல்லி பயணம் என்பது கட்சியின் கட்டமைப்பு தேர்தல் குறித்த கலந்தாய்வு ஏற்கனவே முடிவு செய்த கூட்டம். தமிழகத்தில் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறாக சித்தரித்து தவறான கருத்துக்களை பதிவு செய்கிறது. அவர்களின் இஷ்டத்திற்கு அரசியல் நாகரீகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். யூகங்களின் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி ஐந்து முறையாக வெற்றி கூட்டணியாக உள்ளது. தற்போது காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தை டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்பது குறித்து கேட்டபோது, "ஏற்கனவே எங்களுடைய திட்டமிடல் குறித்து முதலமைச்சரிடமும், அமைச்சரிடமும் தெரிவித்து விட்டோம். எனவே ஆலோசனைக் கூட்டம் இருந்ததால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக டெல்லி செல்ல வேண்டியது இருந்தது. அதுமட்டுமின்றி முன்னாள் தலைவர்கள் ஈவிகேஸ் இளங்கோவன் கிருஷ்ணசாமி தங்க பாலு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என கூறிவிட்டு தான் சென்றோம் அனைவரும் கலந்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள்" என விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க - இமாச்சல பிரதேசத்தில் குழப்பம்.. ஆட்சி கவிழுமா..? 15 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட்!
எங்களுக்குள் பிரச்சனை இருப்பது போல் பத்திரிகைகள் பேசுவது ஏற்புடையதாக இல்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலினும், ராகுல் காந்தியும் உடன்பிறவா சகோதரர்கள் போல் உறவு வைத்துள்ளார்கள். அதை பிரிக்க வேண்டாம்.
2019 தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலில் இறுதியில் தான் கையெழுத்து போடப்பட்டது. எனவே அவசரம் இல்லை. இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. எங்கள் உறவு சரியாக இருக்கிறது மற்றும் சரியான திசையில் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து தகவல்கள் வெளிவரும் எனக் கூறினார்.
மேலும் படிக்க - தேர்தல் முடிந்த உடன் இந்த காரியம்தான்... உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தடலாடி!
இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என பிரதமர் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, "{இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்பது இந்தியாவை மேன்மையடைய செய்ய கூடாது என்பது தான் அர்த்தம்.
அம்ருத் இந்தியா போன்ற திட்டங்கள் அரசியலுக்காக ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. எத்தனை முறை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டது. அதேபோன்று உண்மைக்கு புறம்பாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதுதான் பாஜக மற்றும் பிரதமரின் வேலையாக உள்ளது" என்றார்.
மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் பாஜகவில் இணைவார்கள் எனக்கூறிய நிலையில் "யாரும் வராதது" குறித்து கேட்டபோது, "ஆள் பிடித்து பார்க்கிறது. வருமான வரித்துறை போன்ற நண்பர்களையும் சோதனைக்கு அனுப்புவார்கள். வருகிறார்களா? என்று காத்திருப்பார்கள். இதெல்லாம் பாஜகவின் வேலை" என்றார்.
செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, "பத்திரிகையாளர் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறையை கைவிட்டு ஜனநாயக முறைக்கு திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
மேலும் படிக்க - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ