திருவள்ளுவர் மாணவி தற்கொலை: உடலை கண்டு கதறி அழுத ஊர் மக்கள்
Girl Student Suicide: வழக்கம் போல தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, மற்றவர்கள் உணவருந்தச் சென்ற நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கதையாகி பீதியை கிளப்பி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. வழக்கம் போல தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, மற்றவர்கள் உணவருந்தச் சென்ற நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை செய்துகொண்ட விவரம் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த கிராமமான தெக்களூர் கிராமம் வந்தது.
மேலும் படிக்க | திருவள்ளுவர் மாணவி தற்கொலை - பள்ளி வளாகத்திற்குள் வைத்தே ஆசிரியைகளிடம் விசாரணை
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி சரளாவின் உடல் தெக்களூர் கிராமம் வந்தடைந்தது. மாணவியின் உடலைக் பார்த்து கிராம மக்கள் கதறி அழுதனர்.
தற்கொலை செய்து கொண்ட திருவள்ளூர் மாணவியின் சொந்த ஊரான தெக்களூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணம் குறித்து காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் பள்ளி சார்பாக கொடுக்கப்பட்ட தனித்தனி அறிக்கைகள் மூன்றும் வித்தியாசப்படுவதாக கூறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரான தெக்களூருக்கு கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடும் அரசு சார்பில் வழங்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104
மேலும் படிக்க | உடல் உறுப்புகள் தானம் மூலம் 'தனயனை காத்த தாய்'
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ