சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் 25வயதான இந்துமதி. தி.நகரைச் சேர்ந்த 37-வயதான குமரன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்திருக்கிறார். புது கனவோடு புகுந்த வீட்டிற்குச் சென்ற இந்துமதிக்கு அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
திருமணம் ஆன நாள்முதலே, ராசியில்லாதவள், அதிகம் படிக்காதவள், குறைவாக சாப்பிடு என இந்துமதியை அவரது மாமியாரான சாந்தி... கடும் கொடுமைக்கு ஆளாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில், 4 மாத கர்ப்பிணியாக உள்ள இந்துமதி மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு அவரது தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, மாமியார் கொடுமையால் தாய்வீட்டிற்கு சென்ற இந்துமதியிடம், பேசுவதை அவரது கணவர் குமரன் குறைத்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தாய் பேச்சை கேட்டுக் கணவரும் கண்டுகொள்ளாமல் போனதால் விரக்தியில் இருந்த இந்துமதி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அப்போது, இந்துமதி தனது அக்காவிற்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் 'என் சாவுக்கு கணவர் குமரனும், அவரது தாயார் சாந்திதான் காரணம் என்றும், தானும் தன் பாப்பாவும் செல்வதாகக் கண்ணீரோடு உருக்கமாகப் பேசி அனுப்பியிருக்கிறார்.
வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்ஜை பார்த்துவிட்டு இந்துமதியை காப்பாற்றுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்துமதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இரு உயிரும் துடிதுடித்துப் பிரிந்தது. தகவலறிந்து சென்ற வேளச்சேரி போலீசார், இந்துமதியின் உடலை மீட்டு இராய பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | திருவள்ளுவர் மாணவி தற்கொலை - பள்ளி வளாகத்திற்குள் வைத்தே ஆசிரியைகளிடம் விசாரணை
இந்துமதியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் இந்த வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை தீவிரமெடுத்துள்ளது. இந்நிலையில், 4 மாத கர்ப்பிணி தன்னுடைய மரணத்திற்கு மாமியார்தான் காரணம் என ஆடியோ பதிவிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ