தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறு
Tamil Nadu Tiruvallur Parliamentary Constituency History: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Thiruvallur Lok Sabha Constituency Full Details: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி என்பது தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது 2008 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதி (Parliament of India Constituency) ஆகும். 2009 ஆம் ஆண்டு தனித் தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதியின் கீழ் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தமுறை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி விவரம்
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு 1951 முதல் 1962 வரை மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு 1967 முதல் 2009 வரை தேர்தல் நடைபெறவில்லை. தொகுதி மறுசீரமைப்புக்கு பின் 2009 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இதுவரை நடந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது, மற்ற அனைத்து முறையும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க - தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,58,098
- ஆண் வாக்காளர்கள்: 10,10,968
- பெண் வாக்காளர்கள்: 10,46,755
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 375
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்
- கும்மிடிபூண்டி
- பொன்னேரி (தனி)
- திருவள்ளூர்
- பூந்தமல்லி (தனி)
- ஆவடி
- மாதவரம்
2024 லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
இந்திய தேசிய காங்கிரஸ் (திமுக கூட்டணி) - சசிகாந்த் செந்தில்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (அதிமுக கூட்டணி) - நல்லதம்பி
பாரதிய ஜனதா கட்சி - பொன். பாலகணபதி
நாம் தமிழர் கட்சி - ஜெகதீஷ் சந்தர்
2019 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதி வெற்றி நிலவரம்
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் 7,67,292 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 4,10,337 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர்.பி.வேணுகோபால் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் எம். லோகரங்கன் 73,731 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.வெற்றிசெல்வி 65,416 வாக்குகளும் பெற்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ