India General Election Cost: இந்தியாவில் தேர்தல் 'திருவிழா' போல் கொண்டாடப்படுகிறது. சட்டசபை தேர்தல் ஒரு மாநிலத்திற்குள் நடைபெறுவதால், அது அந்த மாநில மக்களுக்கான கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் லோக்சபா தேர்தலைப் பற்றி பேசினால், அது ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் அது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சண்டை, கேலி, சச்சரவு, பணம் என திருவிழா போல் கொண்டாடப்படுகிறது. இதோ 2024 மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு தெருவிலும், வட்டாரத்திலும், சதுக்கத்திலும், சந்திப்புகளிலும் பெரிய வாசகங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இந்திய தேர்தல் சூழலில், தேர்தல்களில் பணம் தண்ணீர் போல் செலவழிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்த எவ்வளவு செலவாகிறது? ஒவ்வொரு வாக்காளருக்கும் எவ்வளவு செலவிடப்படுகிறது? அரசியல் காட்சிகள் எவ்வளவு செலவழிக்கின்றனர்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
ஒவ்வொரு வாக்குக்கும் ஆகும் செலவுகள் கண்காணிக்கப்படும்
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில், எங்கு, எதற்கு, எவ்வளவு செலவு செய்தார்கள் என கணக்குகள் வைக்கப்படுகின்றன. இருப்பினும், காலப்போக்கில், தேர்தல்களுக்கான செலவுகள் மற்றும் தேர்தலை நடத்தும் முறைகளும் மாறியுள்ளன. முன்னதாக, தேர்தல்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2004 முதல், அனைத்து தேர்தல்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகின்றன. தேர்தலை நியாயமாகவும், சுமூகமாகவும் நடத்த, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கவும், அதை பராமரிக்கவும் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
முதல் மக்களவைத் தேர்தலுக்கு ஆன செலவு எவ்வளவு?
தேர்தல் செலவு பற்றி பார்த்தால், தேர்தல் வரவு செலவுத் திட்டம் என்பது வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் பல ஆண்டுகளாக சேவைகள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 1951-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்ததாகவும், இந்தத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 10.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024 லோக்சபா தேர்தல் செலவு புதிய சாதனை படைக்குமா?
2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுமார் ரூ.1114.4 கோடி செலவிடப்பட்டது. 2014ல், இந்த செலவு, 3870 கோடி ரூபாயாக அதிகரித்தது. அதாவது 2009 தேர்தல் செலவை விட, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கடந்த தேர்தலில் அதாவது 2019 ஆம் ஆண்டு தேர்தல் செலவு ரூ.6600 கோடியை தாண்டியுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த தேர்தல் செலவு, பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க - Electoral Bonds : அதிக நன்கொடை பெற்ற டாப் 10 கட்சிகள்.... பாஜக டூ அதிமுக வரை!
ஒரு ஓட்டுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது?
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை பார்த்தால், 1951-ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் சுமார் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஒரு வாக்காளருக்கு 60 பைசா செலவழிக்கப்பட்டது. அதைவிட 1957-ம் ஆண்டு தேர்தலில் மிகக் குறைந்த அளவே செலவு செய்யப்பட்டது. இத்தேர்தலில் சுமார் ரூ.5.9 கோடி செலவழிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு வாக்காளருக்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவிடப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல 2009 மக்களவைத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கான செலவு ரூ.17 ஆகவும், 2014-ல் ரூ.46 ஆகவும், 2019-ல் ஒரு வாக்காளருக்கு ரூ.72 ஆகவும் செலவிடப்பட்டது. தேர்தல்களை நடத்துவதற்கு அரசு செலவழிப்பதைத் தவிர, கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சார்பில் பணமும் தண்ணீர் போல செலவிடப்படுகிறது.
தேர்தல் செலவுகளை எல்லாம் யார் ஏற்கிறார்கள்?
ஆனால் இந்த தேர்தல் செலவுகளை யார் ஏற்பார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இதற்கான பதில், நாட்டின் தேர்தல் செலவுகளை மத்திய அரசு ஏற்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் அமைத்தல், இவிஎம் (EVM) இயந்திரங்கள் வாங்குதல் போன்ற முக்கியச் செலவுகள் இந்தச் செலவில் அடங்கும். தேர்தல் தொடர்பான அனைத்து செலவுகளும் தேர்தல் கமிஷனுக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் வழங்கப்படும். இதில் EVM இயந்திரங்களை வாங்குவது போன்ற முக்கிய செலவுகள் சட்ட அமைச்சகத்தின் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க - எந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்? - காஷ்மீர் முதல் தமிழகம் வரை... முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ