சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சந்தனு. இவருக்கு வயது 18. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் சந்தனு கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இளம் கிரிக்கெட் வீரர் சந்தனு மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் தற்போது சந்தனு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் (Tamil Nadu Cricket Association) அணியில் ஒன்று முதல் 5 டிவிஷன் விளையாடி ஒபனிங்க் வேகப்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும் இருந்து வருகிறார். அதேபோல் விரைவில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ள வீராக பார்க்கப்படுகிறது. 


ALSO READ | வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு


இந்த நிலையில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர் சந்தனு ஆஸ்திரேலியா சென்று பயிற்சி மேற்கொள்ள தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு லட்ச ரூபாயை வெள்ள நிவாரணத் தொகையாக (TN Rain) வழங்கியுள்ளார். இதனை வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியிடம் காசோலையாக வழங்கினார். இது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





இது குறித்து கிரிக்கெட் வீரர் சாந்தனு கூறியதாவது., நான் ஆஸ்திரேலிய சென்று பயிற்சி எடுக்க சிறுக, சிறுக பணம் சேர்த்து வந்து இருந்தேன். தற்போது கொரோனா காலம் என்பதால் பயிற்சி எடுக்க என்னால் முடியவில்லை. தற்போது சமீபத்தில் தமிழகத்தில் கன மழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்னால் தன்னிடம் உள்ள பணம் மற்றவருக்கு பயனாக இருக்கட்டும் என நிதி வழங்கியதாக கூறினார். மேலும் விரைவில் தன் திறமையால் தமிழக அணியிலும் இந்திய அணியிலும் இடம் பிடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


ALSO READ | தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR