கோவை தெற்கு தொகுதி சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் இன்று அவர் கடிதம் எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் என்பது போர்க்களமோ, கிரிக்கெட் போட்டியோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள் என்று டுவிட்டரில் வெளியிட்ட திறந்த மடலில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் நீதி மய்யம் கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளர்களே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பு வணக்கம். போர்க்களம் அல்ல தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.


Also Read | 99 SONGS திரைப்படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மானை தூண்டியது மணிரத்தினமா?


மேலும், வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன். யார் வென்றாலும் மக்கள் வெற்றி கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புகிறேன். 


யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள். ஜனநாயக பண்பாடு மக்கள் பணிக்கு வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்கவேண்டும். 


கோவை வழிகாட்ட வேண்டும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன்." இவ்வாறு மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரும், நடிகருமான கமல் ஹாசன் தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also Read | கலையைப் பாதுகாக்க அரசின் ஆதரவைக் கோரும் சவுராஷ்டிரா கைத்தறி நெசவாளர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR