குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி 'மக்கள் செல்வன்' எனும் பட்டத்தை பெற்றவர் விஜய் சேதுபதி. தன் இயல்பான நடிப்பால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும், வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருந்த போதுதான் இந்த சம்பவம் அரங்கேறியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய விருது பெற்ற நடிகருக்கு இவ்வாறு நடந்தது அனைவரையும் அதிர வைத்தது. விமானத்தில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபீ  எடுக்க வேண்டுமென்று அவரின் உதவியாளர் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் மது அருந்தியிருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் மறுத்துவிட்டார். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து விமானத்திலேயே கைகலப்பு ஏற்பட்டது. 


 



அதனையடுத்து விமான நிலையத்திற்கு விஜய் சேதுபதி வந்ததும்,மகா காந்தி போதையில் செல்ஃபீ  எடுக்க முயன்றதாகவும், உதவியாளர் அதனை மறுத்ததால் தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மகா காந்தி கூறுகையில், "நான் விஜய் சேதுபதியிடம் “தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்” என்றேன்., “இது தேசமா?” என்று கேட்டார்.“குரு பூஜைக்கு வந்தீர்களா” என்றேன்.அதற்கு  “யார் குரு?” என்றார். இது தொடர்பாக பேசியபோது என்னை அவர்கள் தாக்கினார்கள். அதனால் நான் திருப்பி தாக்கினேன்.மேலும் விமான நிலைய CCTV காட்சிகளை கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை தாக்கியதை நான் நிருபிப்பேன்" என்று மகா காந்தி கூறியுள்ளார்.


ALSO READ தோட்டாக்கள் தெறிக்க வெளியானது விக்ரம் படதின் First Glance!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR