‘சைக்கோ கணவனால்’ கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மனைவி..!
தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரத்தில் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரத்தை சேர்ந்தவர் வினோத். ஆட்டோ டிரைவரான இவருக்கு விஜி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஆசை ஆசையாக திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையில் நுழைந்த விஜிக்கு அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் கேள்வி, குறைகள் என வினோத்தின் வார்த்தைகளால் நொந்துபோனார்,விஜி. ஆனால் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது. என்ன செய்யமுடியும் ?... குழந்தைகளுக்காக வாழ்க்கையை சகித்து வாழத்தொடங்கியவருக்கு வினோத்திடம் இருந்து வந்த இன்னொரு பிரச்சனையும் பூகம்பம் போல வெடித்து சிதறியது.
நான்கு சுவருக்குள் மனைவியை அடிமையாக்கி வைத்தவர், அளவுக்கு அதிகமான சந்தேகத்தையும் விஜியின் மீது கொட்டியிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் சண்டைகளே வாழ்க்கையை நகர்த்திப்போட்டது. ஆனால் அது இப்படி போய் முடியும் என்று விஜி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். சம்பவத்தன்று வழக்கம்போல விஜியிடம் தன்னுடைய அதிகாரத்தை காட்டியிருக்கிறார், வினோத். ஏற்கனவே புத்தி மாறிப்போன வினோத், விஜியின் எதிர்ப்பேச்சால் கடும் ஆத்திரமடைந்திருக்கிறார். ஆத்திரத்தோடு விட்டுவிடாமல் அவர் எடுத்த முடிவுதான் கொடூரமானது.
மனைவி என்றுபாராமல் கீழே தள்ளி கழுத்தை நெரித்துத் துடிக்க துடிக்க கொலை செய்திருக்கிறார். பாவம்,விஜி.. வாழ வந்த இடத்தில் பரிதாபமாக உயிரை விட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினோத்தின் குடும்பத்தினர் வடபாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஓவர் ஸ்பீட்: ஆப் மூலம் பைக் புக் செய்து பயணித்தவர் பலி..! ஓட்டியவர் எஸ்கேப்..!
‘குடி குடியை கெடுக்கும்... கோபம் குடும்பத்தை கெடுக்கும்’ என்பார்கள், அது இன்று வினோத்தின் வாழ்க்கையில் பழித்துப்போனது. மனைவியை கொன்று பிள்ளைகளையும் அனாதையாக்கிவிட்டு தானும் அனாதையாய் சிறையை நோக்கி புறப்பட்டுவிட்டார்....
மேலும் படிக்க | ரகசிய காதலியின் 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த காதலன்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR