ரகசிய காதலியின் 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த காதலன்..!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து அருகே ரகசிய காதலியின் இரண்டு வயது பெண் குழந்தையை காதலனே சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 19, 2022, 04:12 PM IST
  • ரகசிய காதலி மீது சந்தேகம்
  • 2 வயது குழந்தையை கொலை செய்த கொடூரம்
  • தப்பியோடிய காதலனை பிடித்து விசாரணை
ரகசிய காதலியின் 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த காதலன்..! title=

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் டேவிட். திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். டேவிட்டுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ஸ்டெபினா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவருக்கும் இடையே நாளடைவில் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில், டேவிட்டை தனது வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறார், ஸ்டெபினா. அதுதான் அவரது 2வயது பெண் குழந்தை பலியாக காரணமாகி போனது. 

Baby murder

டேவிட், ஸ்டெபினா இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழக ஆரம்பிக்க கணவன் மனைவி போல வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கிடையே ஸ்டெபினாவின் செல்போன் அடிக்கடி வெயிட்டிங்கில் விழுந்திருக்கிறது. இதுகுறித்து இவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்றும் அதே போல் நீண்ட நேரமாக ஸ்டெபினா செல்போனில் பேசியிருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த டேவிட், அவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். செல்போன் பேச்சு குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சந்தேகப்பார்வையில் வெறிபிடித்த மிருகம் போல நடந்துகொண்ட டேவிட், ஸ்டெபினாவையும் அவரது மூத்த பிள்ளையையும் கடுமையாக தாக்கியுள்ளார். அதில், இருவரும் மயக்கமடைந்து விழுந்தனர். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் கத்திய டேவிட், தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையின் மீது கைவிரித்திருக்கிறார். பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் குழந்தையை தொட்டிலுடன் சேர்த்து சுவரில் ஓங்கி அடித்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துபோனது. 

Baby murder

மேலும் படிக்க | தீரன் பட பாணியில் வேட்டையாடிய கும்பல் - கதிகலங்கிய கண்டமங்கலம்..!

அதைப்பார்த்த ஆத்திர புத்தியில் இருந்து அதிர்ச்சியடைந்த டேவிட் அங்கிருந்து தப்பியோடினார். மறுநாள் காலை கதவுகள் திறந்துகிடந்ததைப் பார்த்த, அக்கம் பக்கத்தில் வசிப்பவர், ஸ்டெபினாவின் வீட்டிற்கு சென்று பார்க்க எல்லாம் தெரியவந்தது. மயங்கி கிடந்த ஸ்டெபினாவையும், அவரது மூத்த பிள்ளையையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்த வரவழைக்கப்பட்டனர். தொட்டிலில் உயிரிழந்து கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் விசாரணையை தொடங்கினர். அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்து டேவிட் மீதான குற்றம் உறுதியானதை அடுத்து தலைமறைவாக இருந்தவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆத்திரம் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கும் ; அதே ஆத்திரம்தான் இன்று டேவிட்டின் வாழ்க்கையை தலைகீழாய் மாற்றிவிட்டது. கணவரை இழந்த ஸ்டெபினாவும் தாகத உறவால் தன் பிள்ளையை இழந்துவிட்டார். 

மேலும் படிக்க | பாலியல் தொழில் - புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உண்டு ?

 உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News