Rural Local Body Elections: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் ஆரம்பமான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தொழில்நுட்பக்  கோளாறு, மோதல், வாக்குப்பேட்டி பிரச்சனை உட்பட சில காரணங்களால் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை தாமதமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடேன் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 


இதுவரை நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் வாக்குப் பெட்டியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு 20-ம் தேதி நடைபெறும்.


இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சிலர் வென்றுள்ளனர்.


ALSO READ |  விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த கார்கள் தடுத்து நிறுத்தம்!


செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வடபாதியை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் என்பவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


அதேபோல மாமண்டூரில் இரண்டாவது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு லோகநாதன் என்பவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


வாங்கு எண்ணிக்கை சுவாரசியம்:


வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கடல் மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


இதற்கிடையில் வல்லம் ஒன்றியத்தில் 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ |  உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி


குன்றத்தூரில், மாங்காடு பகுதியில் காலை உணவு தரவில்லை என வாக்கு எண்ணும் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உணவு, குடிநீர் என எதுவும் இன்னும் தரவில்லை என ஆதங்கம். இதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR