Thousand Rupees For Women: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குடும்ப தலைவிக்களுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதியமைச்சரின் அறிவிப்பு


இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,"தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.



வழிமுறைகள் விரைவில்


இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கிவைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அறிவித்தார். எனவே, இத்திட்டத்திற்கு விண்ணபிப்பது குறித்து விரைவில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | மகளிருக்கு ரூ.29 ஆயிரம் கொடுங்கள்...! அண்ணாமலை போடும் திடீர் குண்டு - ஏன் தெரியுமா?


யார் தகுதி வாய்ந்தவர்கள்?


இதையடுத்து, இதில் தகுதியுடைவர்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்தார். அதில்,"இத்திட்டம் மூலம், ஏழை, எளிய மகளிர்கள் பயனடைவார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயர இத்தொகை பெரிதும் உதவும்" என தெரிவித்திருந்தார்.



மேலும், பட்ஜெட் உரையில் தகுதியுடைவர்கள் என குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,"அனைத்து திட்டங்களும் அதற்கு தகுதியுடைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோன்றுதான் இத்திட்டமும். இதில், ஏழை, எளிய மகளிர் பயன்படைவார்கள். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் இதில் பயனடைய மாட்டார்கள்" என தெரிவித்தார்.


நேரடியாக வங்கி கணக்கில்...?


அதுமட்டுமின்றி, இதில் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்றும் இதுகுறித்த முழு தரவுகள் தற்போது தன்னிடம் இல்லையென்றாலும் அமைச்சர் என்ற ரீதியில் ஒரு கணிப்பில் இதை கூறுவதாக தெரிவித்தார். மேலும், இத்தொகை, எவ்வித இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும், இருப்பினும் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய முடிவு எடுத்து அதனை அறிவிப்பார் என  தெரிவித்தார். 


மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2023: ரியல் எஸ்டேட் துறைக்கு பம்பர் பரிசு கொடுத்த பிடிஆர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ