மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்-ஈபிஎஸ்!
தமிழகத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பதினான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சரின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பதினான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சரின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
>தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லாம்பட்டி கிராமத்தில் திரு. அப்புகவுண்டர் என்பவரின் மகன் திரு. கணேசன் மற்றும் திரு. பெருமாள் என்பவரின் மகன் திரு. முருகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
>கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், திருக்காம்பூலியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராக்கி என்பவரின் மகன் திரு. அசோக்குமார் மற்றும் கருர் வட்டம், வெங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணி என்பவரின் மகன்திரு. கண்ணன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும்;
>வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், வேம்பி கிராமத்தைச் சேர்ந்த திரு. லட்சுமணன் என்பவரின் மகன் திரு. தேவன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னண்ணன் என்பவரின் மகன் திரு. சத்தியன் என்பவர் மின் மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், வரகனேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. தம்பிகலான் என்பவரின் மகன் திரு. தனசேகரன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது, தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், கங்காதரபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து என்பவரின் மகன் திரு. தங்கராசு என்பவர் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் வட்டம், கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகேசன் என்பவர் மின் கம்பத்தில், பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், குமார ராஜ பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. கோபால் என்பவரின் மகன் திரு. தமிழரசன் என்பவர் மருத்துவமனையில் பணியில் இருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், நரசிங்கம் 4 பிட் கிராமத்தைச் சேர்ந்த திரு. மலையாண்டி என்பவரின் மகள் சிறுமி இயலரசி விளையாடிக் கொண்டிருந்த போது, எர்த் கம்பியை பிடித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தெற்குத்தெரு கிராமத்தைச் சேர்ந்த திரு. கக்கன் என்பவரின் மகன் திரு. இளையராஜா என்பவர் மின் கம்பத்தில், பழுது நீக்கம் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், வன்னிவேடு மதுரா இந்திரா நகரைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் திரு. ஜானகிராமன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அத்தாணி வடக்கு வட்டத்தைச் சேர்ந்த திரு. வேலாயுதம் என்பவரின் மகன் திரு. பாலையா என்பவர்
எதிர்பாராத விதமாக மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
>இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பதினான்கு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பதினான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்!