இன்றைய வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை!
தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசில் இருந்து குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.