சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பரக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர் அப்போது ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைப்பற்றபட்டா பணத்திற்கு எந்த ஒரு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த மூன்று நபர்களை கைது செய்து தேர்தல் பரக்கமுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சதீஷ், நவீன், பெருமாள் மூவரையும் காவல் நிலைய அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்க்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் இருந்து பணம் கொண்டுவரப்பட்டதாகவும் இது நைனார் நாகேந்திரன் சொந்தமான பணமும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேர்தல் பரக்கும்படை அதிகாரிகள் தாம்பரம் காவல் துறையினர் இணைந்து நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.


மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி பிரதமராக வாய்ப்பு உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்!


மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பாஜக நிர்வாகி கோவர்தன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலிலும் தேர்தல் பரக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு ஒரு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர் மேலும் இது தொடர்பாக கோவர்தனுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது அதில் பணத்தை கடத்தி வந்த மூவரில் சதிஷ் என்பவர் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பணிபுரிந்து வரும் ஊழியர் என்பதும் மேலும் மூவரும் சேர்ந்து சென்னையில் வெவ்வேறு இடங்களிலிருந்து இந்த பணத்தை ஒன்று சேர்த்து ரயில் மூலம் திருநெல்வேலி கொண்டு சென்று தேர்தலில் பண பட்டுவாடா செய்ய இருந்ததாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் இடம் இருந்து நைனார் நாகேந்திரன் அடையாள அட்டை பாஜகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்திருப்பதாக முதல் தகவல் கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நைனார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளனர். நான்கு கோடி ரூபாய் பணம் தனக்கு சொந்தமானது இல்லை என நைனார் நாகேந்திரன் கூறிவந்த நிலையில் தாம்பரம் போலீசார் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்த பணம் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ