நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெருந்தருவில் வீட்டிற்குள் புகுந்து
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் ஒருவரை நேற்று முன்தினம் இரவு மூன்று 6 பேர் கொண்ட கும்பல்  அரிவாளால் வெட்டியது. அதனை தடுக்க வந்த அவரது சகோதரி சந்திர செல்வி என்பவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதைப்பார்த்த அவரது தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவனுக்கு அரிவாள் வெட்டு:


நெல்லை மாவட்த்தில் உள்ள நாங்குநேரி அருகே பெருந்தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவரது பண்ணரெண்டாம் வகுப்பு படிக்கும் பேரனும் பேத்தியும் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை வீடு புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதை, தடுக்க வந்த மாணவனின் சகோதரிக்கும் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள், ஆபத்தான நிலையில் நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைப்பார்த்த அதிர்ச்சியில் வீட்டில் இருந்த அவரது தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார்.


மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?



முதியவரின் உடல் அடக்கம்:


மருத்துவமனையில் உள்ள மாணவனின் தாத்தா மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக நாங்குநேரி பகுதியில் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து  குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பள்ளியில் பிரச்சனை..


12ஆம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் துறையினர் இதை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வள்ளியூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்தது. இது சம்பந்தமாக மூன்று மாணவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். 


ஆறு பேர் கைது:


வெட்டுபட்ட மாணவருக்கும் அவருடன் அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கும் சாதிய ரீதியிலான மோதல்கள் அவ்வப்போது எழுந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரிவிவந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் எழுந்துள்ளது. மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக ஒன்றிய செயலாளர் உறவினர் மற்றும் சக மாணவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 


சிறார்கள்..


நாங்குநேரி பகுதியின் டிஎஸ்பி ராஜு இந்த சம்பவம் குறித்து மாணவர் பயின்ற பள்ளியில் விசாரணை மேற்காெண்டார். பாதிக்கப்பட்ட மாணவருடன் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அதில் ஒரு சிறுவன் நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் உடன் பிறந்த சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.


மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஜி.வி.பிரகாஷ்குமார் பதிவு:


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 



இந்த பதிவில், அவர் “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.