திருப்பத்தூரை அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் கனகராஜ். அண்ணன் தம்பிகளான இருவரும் மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜன் மனைவி பூங்கொடி பூ கட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் வழியிலேயே அமர்ந்து கொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வாழ்வதற்கு எதிர்ப்பு.. சாதலை தேர்ந்தெடுத்த காதலர்கள்..!


இது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவங்களை தன்னுடைய கணவர் கனகராஜிக்கு பூங்கொடி போன் செய்து கூறியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்தில் வீட்டிற்கு வந்த கனகராஜ் தன்னுடைய மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிய அண்ணன் கோவிந்தராஜை மரமேறி கிளைகளை கழித்துவிடும் கத்தியால் வெறித்தனமாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து கோவிந்தராஜ் இறந்துள்ளார்.


ALSO READ | வீட்டில் திருடமுயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை - 10 பேர் கைது.


சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கந்திலி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், கோவிந்தராஜின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அண்ணனை கொலை செய்த தம்பி கனகராஜை கைது செய்தனர். தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR