வாழ்வதற்கு எதிர்ப்பு.. சாதலை தேர்ந்தெடுத்த காதலர்கள்..!

ராணிப்பேட்டையில் வாழ்வதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் சாதலை தேர்ந்தெடுத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 13, 2022, 11:23 AM IST
  • இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்
  • பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விருப்பம்
  • எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
வாழ்வதற்கு எதிர்ப்பு.. சாதலை தேர்ந்தெடுத்த காதலர்கள்..!  title=

வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் 24 என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ALSO READ | வீட்டில் திருடமுயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை - 10 பேர் கைது

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள கதிர்வேல், சந்தியாவின் பெற்றோர்களிடம் பேசியுள்ளார். ஆனால் இதற்கு சந்தியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தியா செய்வதறியாது தவித்து வந்துள்ளார். இந்நிலையில், யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா தன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை கேட்ட சந்தியாவின் காதலன் கதிர்வேல் மன வேதனையில் நீலகண்டராயபுரம் என்ற கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ALSO READ | கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தத மனைவி காவல் நிலையத்தில் சரண்

இருவீட்டாரும் சேர்ந்து காவல்துறைக்கு தெரியாமல் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து ரகசிய தகவல் கிடைத்த ராணிப்பேட்டை போலீசார் காதல் ஜோடியான இருவரின் சடலங்களையும் கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வீட்டில் வசித்துவந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டு மரணத்தில் ஒன்று சேர்ந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News